சிவகிரி அருகே வாகன சோதனையில் ரூ.54 ஆயிரம் சிக்கியது - பறக்கும் படையினர் அதிரடி

சிவகிரி அருகே வாகன சோதனையில் ரூ.54 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

சிவகிரி:

சிவகிரி அருகே தொட்டிச்சி மலை ஆற்று பாலத்தின் அருகே பறக்கும் படையினர் பொதுப்பணித்துறை அதிகாரி சரவணன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரள மாநிலம் காயங்குளம் பகுதியில் இருந்து பழனி நோக்கிச் சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது காரில் ரூ.54 ஆயிரத்து 300 பணம் இருந்தது. அதற்குரிய ஆவணம் அவரிடம் இல்லாமல் இருந்தது. காரை கேரளாவை சேர்ந்த சுகுமார் என்பவர் ஓட்டி வந்தார். அவரிடம் இதுகுறித்து கேட்டபோது பழனி கோவிலுக்கு உண்டியலில் காணிக்கை செலுத்த வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து அதிகாரிகள் ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து சிவகிரி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com