பார்வதிபுரத்தில் டாக்டரின் வீட்டில் ரூ.20 லட்சம் நகைகள்-பணம் கொள்ளை

நாகர்கோவில் பார்வதிபுரத்தில் டாக்டரின் வீட்டில் ரூ.20 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் பார்வதிபுரம் சானல்கரையை சேர்ந்தவர் டாக்டர் ஆபிரகாம் ஜோயல் ஜேம்ஸ் (வயது67). இவர் நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன்கோவில் அருகே தனியார் ஆஸ்பத்திரி வைத்துள்ளார். இந்நிலையில் ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்தில் இன்று ஒரு புகார் கொடுத்தார்.

அதில் தனது வீட்டில் நகை மற்றும் பணம் ஆகியவற்றை வீட்டில் உள்ள லாக்கரில் பாதுகாப்பாக வைத்திருந்ததாகவும், கடந்த சில நாட்களாக லாக்கரின் சாவி காணாமல் போன நிலையில் சாவியை தேடி கிடைக்காததால் இன்று நம்பர் லாக் மூலம் லாக்கரை திறந்து பார்த்தபோது அதில் இருந்த ரூ.4லட்சம் ரொக்கப்பணம், 30 பவுன் நகைகள், ஒரு வைர நெக்லஸ் ஆகியவைகளை யாரோ கொள்ளையடித்து விட்டு லாக்கரை மீண்டும் பூட்டிச்சென்று விட்டதாக கூறியிருக்கிறார்.

திருட்டு போன நகைகள் மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.20லட்சம் இருக்கும் என்று தனது புகாரில் தெரிவித்திருக்கிறார். டாக்டரின் புகாரை தொடர்ந்து அவரது வீட்டிற்கு போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் லாக்கர் மற்றும் அது வைக்கப்பட்டிருந்த அறையில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர்.

டாக்டரின் வீட்டிற்கு சமீபத்தில் யார் யாரெல்லாம் வந்துசென்றார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். டாக்டரின் கொள்ளை புகார் பார்வதிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com