

எர்ணாகுளம்:
எர்ணாகுளம் அருகே உள்ள திருக்காசரை நகராட்சிக்குட்பட்ட சமூக நலக்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ரோபோ ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அந்த ரோபோ, வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்தது. மேலும் வாக்களிக்க வந்த அனைவருக்கும் கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வழங்கியது.
அதுமட்டுமின்றி சமூக இடைவெளியை பின்பற்றாமல் வாக்காளர்கள் கூட்டமாக நின்றால், அவர்களை எச்சரிக்கும் வகையில் சத்தம் எழுப்பும் பணியிலும் அது ஈடுபட்டது. முன்னதாக நேற்று அந்த வாக்குச்சாவடியை எர்ணாகுளம் கலெக்டர் சுகாஸ் ஆய்வு செய்தார். அப்போது அவருக்கு அந்த ரோபா உடல்வெப்ப பரிசோதனை நடத்தியது. மேலும் கைகளை சுத்தம் செய்யும் திரவமும் வழங்கியது.