சாக்கடை கால்வாயில் தவறி விழுந்த காவலாளி பலி

சாக்கடை கால்வாயில் தவறி விழுந்த காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

மூலக்குளம்:

ரெட்டியார்பாளையம் கம்பன்நகர் 1-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தினகரன் (வயது 50). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு தமிழரசி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். தினகரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அவர், மது குடித்து விட்டு உழவர்கரை தனியார் மதுபான கடை அருகே நடந்து வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி சாக்கடை கால்வாயில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com