ஸ்ரீகர் பரத், மேக்ஸ்வெல் அபாரம் - கடைசி பந்தில் டெல்லியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூர்

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணியின் ஸ்ரீகர் பரத், மேக்ஸ்வெல் 100 ரன்களுக்கு மேல் சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
அரை சதமடித்த ஸ்ரீகர் பரத்
அரை சதமடித்த ஸ்ரீகர் பரத்
Published on

துபாய்:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று துபாயில் நடைபெற்ற பெங்களூர் அணியும் டெல்லி அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிருத்வி ஷா 48 ரன்கள் எடுத்தார். ஷிகர் தவான் 43 ரன்களும், ஹெட்மயர் 29 ரன்களும் சேர்த்தனர்.

பெங்களூர் தரப்பில் சிராஜ் 2 விக்கெட்டும், சாகல், ஹர்ஷல் படேல், டான் கிறிஸ்டியன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். 

இதையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. தேவ்தத் படிக்கல் ரன் எதுவும் எடுக்காமலும், கேப்டன் விராட் கோலி 4 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். அடுத்து இறங்கிய ஸ்ரீகர் பரத் பொறுப்புடன் ஆடினார். டி வில்லியர்ஸ் 26 ரன்னில் அவுட்டானார். 

அடுத்து இறங்கிய கிளென் மேக்ஸ்வெல் ஸ்ரீகர் பரத்துடன் இணைந்து மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.

இறுதியில், பெங்களூர் அணி 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. ஸ்ரீகர் பரத் 78 ரன்னும், மேக்ஸ்வெல் 51 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இதையடுத்து, பெங்களூர் அணி எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 11ம் தேதி எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com