பூ வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

பூ வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

ராயக்கோட்டை:

கெலமங்கலம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நாகோண்டப்பள்ளி அடுத்த வெங்கட்டாபுரத்தை சேர்ந்தவர் பூ வியாபாரி நாராயணா (வயது 33). இவரது மனைவி சில்பா (28). இவர்களுக்கு லட்சுமி பிரசன்னா (12), சுபாஷ் (7) என்ற 2 மகன்கள் உள்ளனர். தினமும் நாராயணா விவசாயிகளிடம் பூ வாங்கி சென்று ஓசூர் மார்க்கெட்டில் விற்பனை செய்து வந்தார்.

அதன்படி நேற்று காலை வழக்கம்போல பூ வாங்கி சென்று ஓசூர் மார்க்கெட்டில் விற்பனை செய்து விட்டு வரும்போது எஸ்.முதுகானப்பள்ளி அருகே உள்ள ஒரு ஆலமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மனைவி சில்பா கெலமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com