அனுமதி இல்லாமல் பிரசார பேரணி- ஆ.ராசா, சேகர் பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு

ஆ.ராசா, சேகர்பாபு ஆகியோர் மீது முத்தியால்பேட்டை, யானைகவுனி போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். பொது மக்களுக்கு இடையூறு செய்தல், அனுமதி இல்லாமல் ஊர்வலம் சென்றது ஆகியவற்றுக்காக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆ.ராசா,  சேகர் பாபு
ஆ.ராசா, சேகர் பாபு
Published on

ராயபுரம்:

தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் ‘விடியலை நோக்கி’ என்ற பெயரில் தேர்தல் பிரசாரம் நடைபெறுகிறது. இதில் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்று வருகிறார்கள்.

சென்னை துறைமுகம் தொகுதியில் நேற்று தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசாரம் நடந்தது. இதில் தி.மு.க. துணை பொது செயலாளரும் எம்.பி.யுமான ஆ.ராசா, துறைமுகம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

துறைமுகம் தொகுதியில் பிரகாசம் சாலை, வால்டாக்ஸ் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வேனில் சென்று பிரசாரம் செய்தனர். வேனை தொடர்ந்து கார்கள், மோட்டார் சைக்கிள்களில் ஏராளமானோர் சென்றனர்.

இந்தநிலையில் ஆ.ராசா, சேகர்பாபு ஆகியோர் மீது முத்தியால்பேட்டை, யானைகவுனி போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். பொது மக்களுக்கு இடையூறு செய்தல், அனுமதி இல்லாமல் ஊர்வலம் சென்றது ஆகியவற்றுக்காக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com