ரூ.3½ லட்சம் காசோலை மோசடி வழக்கில் வாலிபருக்கு 1 ஆண்டு ஜெயில்- ராணிப்பேட்டை கோர்ட்டு தீர்ப்பு

ராணிப்பேட்டையில் ரூ.3½ லட்சம் காசோலை மோசடி செய்த வழக்கில் வாலிபருக்கு 1 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சிப்காட் (ராணிப்பேட்டை):

ராணிப்பேட்டை சிப்காட் பகுதியை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (வயது 42). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (34) என்பவர் கொடுக்கல்-வாங்கலில், ரூ3½ லட்சம் காசோலை கொடுத்துள்ளார். ஆனால் அதற்குரிய பணத்தை வங்கியில் போடாததால் காசோலை திரும்பி வந்தது.

இதனால் அமிர்தலிங்கம் ராணிப்பேட்டை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று ராணிப்பேட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் தெய்வீகன் இந்த வழக்கை விசாரித்து, கோவிந்தராஜ், அமிர்தலிங்கத்துக்கு ரூ.3½ லட்சம் வழங்க வேண்டும் அத்துடன் 1 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். அப்படி பணத்தை வழங்கத் தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com