ஆற்காடு அருகே வாலிபர் தற்கொலை

ஆற்காடு அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

ஆற்காடு:

ஆற்காடு அருகே வேப்பூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 29). இவர் ரீவைண்டிங் கடை நடத்தி வந்துள்ளார். அரவிந்தனுக்கு குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் நேற்று காலை வீட்டின் தனியறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com