மோட்டார் சைக்கிள் மீது மோதிய ஆட்டோ காம்பவுண்டு சுவரில் புகுந்தது - தொழிலாளி படுகாயம்

ராஜாக்கமங்கலம் அருகே மோட்டார்சைக்கிள் மீது மோதிய ஆட்டோ காம்பவுண்டு சுவரில் புகுந்ததில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
ஆட்டோ காம்பவுண்டு சுவரில் புகுந்ததுள்ளதை படத்தில் காணலாம்
ஆட்டோ காம்பவுண்டு சுவரில் புகுந்ததுள்ளதை படத்தில் காணலாம்
Published on

ராஜாக்கமங்கலம்:

நாகர்கோவிலை அடுத்த வல்லன்குமாரன்விளை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது42), தொழிலாளி. இவர் அனந்தநாடார்குடி அரசு பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்ேபாது எதிரே வந்த ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அத்துடன் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த உடைந்த கம்பவுண்டு சுவரில் புகுந்து நின்றது. இதில் மணிகண்டன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதற்கிடைேய ஆட்டோ டிரைவர் வைராகுடியிருப்பை சேர்ந்த பிஜு (28) இறங்கி தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து தொடர்பாக ஆட்டோ டிரைவர் பிஜு மீது ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com