திருச்சி மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக மழை

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
மழை
மழை
Published on

திருச்சி:

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த சாரல் மழை தொடர்ச்சியாக நேற்றும் நீடித்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சில இடங்களில் சாலைகள் அரிப்பெடுத்து இருந்தன. திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை உள்ள 24 மணிநேர நிலவரப்படி பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விபரம் வருமாறு:-

நந்தியார் அணைக்கட்டு 28, தா.பேட்டை 26, சமயபுரம் 15.40, கல்லக்குடி 15.40, திருச்சி டவுன் 14, திருச்சி ஜங்ஷன் 14, புள்ளம்பாடி 12.60, மருங்காபுரி 10.40, பொன்மலை 8.20, லால்குடி 8.20, துவாக்குடி 8, கோவில்பட்டி 6.40, நாவலூர் குட்டப்பட்டு 6.40, தென்பரை நாடு 5, திருச்சி ஏர்போர்ட் 4.90, கொப்பம்பட்டி 3, மணப்பாறை 2.40, பொன்னையார் அணைக்கட்டு 2.40.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 207.30 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சராசரியாக 8.29 மில்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com