துப்பாக்கி சண்டையில் 22 வீரர்கள் பலி : ராகுல்காந்தி, பிரியங்கா இரங்கல்

சத்தீஸ்காரில் நடந்த துப்பாக்கி சண்டையில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி:

சத்தீஸ்காரில் நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையினர் 22 பேர் பலியானது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘‘சத்தீஸ்காரில் நடந்த துப்பாக்கி சண்டையில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘‘ஒட்டுமொத்த நாடும் சோகத்திலும், கோபத்திலும் இருக்கிறது. நமது வீரர்களின் உயிர்த்தியாகத்தை நாடு எப்போதும் நினைவில் வைத்திருக்கும். இந்த துயரமான நேரத்தில், அந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு கடவுள் துணை இருக்கட்டும்’’ என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com