நடிகை ராகிணி திவேதிக்கு ஜாமீன் கிடைக்குமா?: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

நடிகை ராகிணி திவேதி ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் இன்றாவது ராகிணிக்கு ஜாமீன் கிடைக்குமா என்று எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
நடிகை ராகிணி திவேதி
நடிகை ராகிணி திவேதி
Published on

பெங்களூரு :

போதைப்பொருட்கள் பயன்படுத்திய வழக்கில் கன்னட நடிகை ராகிணி திவேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். 

இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டு, கர்நாடக ஐகோர்ட்டில் ராகிணி மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்டு, ஜாமீன் வழங்கவும் மறுத்து விட்டது. இதனால் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் ராகிணி திவேதி மனு தாக்கல் செய்தார். 

அந்த மனு மீதான விசாரணை இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் இன்றாவது ராகிணிக்கு ஜாமீன் கிடைக்குமா என்று எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com