வெவ்வேறு சம்பவங்கள்: விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை

புதுக்கடை அருகே வெவ்வேறு சம்பவங்களில் விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

புதுக்கடை:

வேங்கோடு அருகே குஞ்சாகோடு பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 65), விவசாயி. இவருக்கு தங்கம் என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இளைய மகள்களுக்கு திருமணம் செய்து கொடுக்க போதிய வருமானம் இன்றி அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்புற்ற விஸ்வநாதன் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி மருந்து குடித்து மயக்க விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஸ்வநாதன் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

தேங்காப்பட்டணம் அருகே கீழ்குளம் பகுதியை சேர்ந்த ராஜரத்தினம் மகன் கவிதாஸ் (39). இவருக்கு திருமணம் செய்து வைக்க பல இடங்களில் வரன் பார்த்து வந்தனர். ஆனால், எந்த வரனும் சரியாக அமையவில்லை. இதனால், மனமுடைந்த கவிதாஸ் வாழ்க்கையில் வெறுப்புற்று தனது அறையில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு நெய்யூர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவங்கள் குறித்து புதுக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com