புதுச்சத்திரம் அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை

புதுச்சத்திரம் அருகே கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

நாமக்கல்:

புதுச்சத்திரம் அருகே உள்ள வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40). கட்டிட மேஸ்திரியான இவர், டிரைவர் பணிக்கும் செல்வது உண்டு. இவர் தன் மனைவி கலைவாணியை பிரிந்து கடந்த 12 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார்.

இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த விதவை பெண் ஒருவருடன் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அந்தபெண் கோழிப்பண்ணைக்கு வேலைக்கு சென்று விட்டார். பிற்பகலில் வந்த அவர் ஏன்? மாட்டுக்கு புல் போடவில்லை என விஜயகுமாரிடம் கேட்டு உள்ளார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

பின்னர் அந்த பெண் மாட்டை பிடித்து வர சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த விஜயகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com