புன்னம் சத்திரம் அருகே மது விற்றவர் கைது

புன்னம் சத்திரம் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

நொய்யல்:

புன்னம் சத்திரம் அருகே பெரியரெங்கம் பாளையம் பகுதியில் வேலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வீட்டில் வைத்து மது விற்றுக் கொண்டிருந்த பெரியரெங்கம் பாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்கிற சீதாராமன் (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்காக வைத்திருந்த 7 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com