பஞ்சாப்பில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் காங்கிரசில் இணைந்தனர்

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி சார்பில் எம்.எல்.ஏ.க்களாக இருந்து வந்த சுக்பால் கைரா, பிர்மால் சிங், ஜெக்தேவ் சிங் கமாலு ஆகிய 3 பேரும் சமீப காலமாக கட்சித்தலைமையுடன் அதிருப்தியில் இருந்து வந்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சண்டிகர்:

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி சார்பில் எம்.எல்.ஏ.க்களாக இருந்து வந்த சுக்பால் கைரா, பிர்மால் சிங், ஜெக்தேவ் சிங் கமாலு ஆகிய 3 பேரும் சமீப காலமாக கட்சித்தலைமையுடன் அதிருப்தியில் இருந்து வந்தனர். இவர்கள் 3 பேரும் நேற்று மாநில முதல்-மந்திரி அமரீந்தர் சிங் முன்னிலையில் தங்களை காங்கிரசில் இணைத்துக்கொண்டனர். அவர்களை அமரீந்தர் சிங் வரவேற்றார்,

காங்கிரசில் இணைந்த 3 எம்.எல்.எ.க்களில் சுக்பால் கைரா ஏற்கனவே காங்கிரசில் இருந்தவர் ஆவார். இவர் கடந்த 2015-ம் ஆண்டுதான் காங்கிரசில் இருந்து விலகி இருந்தார்.

பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களின் வருகை காங்கிரசுக்கு மேலும் பலம் சேர்க்கும் என கூறப்படுகிறது.

அதேநேரம் மாநில காங்கிரசில் உள்கட்சி மோதல் நடந்து வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வருவதற்காக காங்கிரஸ் மேலிட தலைவர்கள் கடந்த சில நாட்களாக பஞ்சாப்பில் முகாமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com