புளியரை சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

லஞ்ச ஒழிப்பு போலீசார் புளியரை சோதனைச்சாவடிக்கு வந்தனர். அங்கு உள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கோப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
Published on

செங்கோட்டை:

நாடு முழுவதும் உள்ள சோதனைச்சாவடிகளில் வாகனங்களில் வருபவர்களிடம் லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரினை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

தென்காசி மாவட்டம் புளியரையில் தமிழக- கேரள எல்லை பகுதியில் வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இந்தவழியாக கேரளாவிற்கு காய்கறிகள், சிமெண்ட் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கனரக வாகனங்களிலும், லாரிகளிலும் தினமும் செல்கிறது.

இதுதவிர கேரளாவில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிடவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கார்களில் சென்று வருகின்றனர். அவ்வாறு வரும் வாகனங்களில் அரசு குறிப்பிட்ட தொகையைவிட கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டு வந்தது.

மேலும் வாகன ஓட்டிகளிடம் அதிகளவு தொகை லஞ்சமாக கேட்டு அதிகாரிகள் துன்புறுத்துவதாக வந்த புகாரினை அடுத்து இன்று அதிகாலை 4 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் புளியரை சோதனைச்சாவடிக்கு வந்தனர். அங்கு உள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கோப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் சிக்கும் என்று கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com