புளியங்குடி அருகே மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

புளியங்குடி அருகே மோட்டார் சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

புளியங்குடி:

புளியங்குடியை அடுத்த டி.என். புதுக்குடி பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போனது குறித்து புளியங்குடி போலீசில் புகார் அளித்திருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சொக்கநாதன்புதூரில் மோட்டார் சைக்கிளை திருட முயன்றதாக புளியங்குடி அருகே உள்ள திருமலாபுரத்தை சேர்ந்த கருப்பசாமி (வயது 46) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் புளியங்குடி பகுதியில் மேலும் சில திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் கருப்பசாமியை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com