புதுச்சத்திரம் அருகே லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

புதுச்சத்திரம் அருகே லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள திருமலைபட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 26), லாரி டிரைவர்‌. கடந்த 15-ந் தேதி நாமக்கல்லுக்கு சென்று வந்த இவர் திடீரென வாந்தி எடுத்தார். இதையடுத்து உறவினர்கள் சிகிச்சைக்காக அவரை நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இங்கு பரிசோதனை செய்தபோது அவர் விஷம் குடித்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து அவரது மனைவி மஞ்சுளா புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மணிகண்டன் ஆன்லைன் மூலம் கடன் பெற்று திருப்பிச் செலுத்த முடியாததால் மன உளைச்சலில் இருந்ததால் தற்கொலை ெசய்து கொண்டிருக்கலாம் என்று கருதுகின்றனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com