திருமக்கோட்டை அருகே பழுதடைந்த பயணிகள் நிழலகத்தை சீரமைக்க வேண்டும்- பொதுமக்கள் வலியுறுத்தல்

திருமக்கோட்டை அருகே பழுதடைந்த பயணிகள் நிழலகத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
பழுதடைந்துள்ள பயணிகள் நிழலகத்தை படத்தி்ல் காணலாம்.
பழுதடைந்துள்ள பயணிகள் நிழலகத்தை படத்தி்ல் காணலாம்.
Published on

திருமக்கோட்டை:

திருவாரூர் மாவட்டம், திருமக்கோட்டை அருகே உள்ள ராஜகோபாலபுரம் மெயின் ரோட்டில் பயணிகள் நிழலகம் உள்ளது. இந்த பயணிகள் நிழலகத்தை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு பஸ்சில் செல்வதற்காக பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த பயணிகள் நிழலகம் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் நிழலகத்தின் உள்ளே இருக்கைகள் இல்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருப்பவர்கள் வெயில், மழை நேரங்களில் சாலைகளில் நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் அவலம் உள்ளது. சில நேரங்களில் பயணிகள் நிழலகத்தின் உள்ளே கால்நடைகள் காணப்படுகின்றன.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த பயணிகள் நிழலகத்தை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com