ஜோலார்பேட்டை பகுதியில் 9 மணி நேரம் தொடர் மின்வெட்டு- பொதுமக்கள் கடும் அவதி

ஜோலார்பேட்டை பகுதியில் நேற்று காலை 11 மணியளவில் இருந்து இரவு 8.20 மணி வரை தொடர்ந்து 9 மணி நேரம் முன் அறிவிப்பு இன்றி மின்சாரம் தடை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
மின்வெட்டு
மின்வெட்டு
Published on

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று வெயில் சுட்டெரித்தது. வெயில் 107.78 டிகிரியாக பதிவானது. மேலும் ஜோலார்பேட்டை மற்றும் சந்தைக்கோடியூர், வக்கணம்பட்டி, புது ஓட்டல் தெருவு, பக்கிரிதக்கா, பால்னாங்குப்பம், ஏலகிரி கிராமம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை 11 மணியளவில் இருந்து தொடர்ந்து இரவு 8.20 மணி வரை தொடர்ந்து 9 மணி நேரம் முன் அறிவிப்பு இன்றி மின்சாரம் தடை செய்யப்பட்டது. அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, வெங்களாபுரம் பகுதியில் உள்ள மின் நிலையத்தில் உயர் மின் அழுத்தம் பழுதுப்பார்க்கும் பணிக்காக 2 மணி நேரம் மின் தடை செய்யப்பட்டுள்ளது. விரைவில் பழுது சரி செய்ததும் மின்சாரம் வினியோகம் செய்யப்படும், எனத் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com