

புதுடெல்லி:
மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் இன்று முதல்கட்ட ஓட்டுப் பதிவையொட்டி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கருத்து தெரிவித்துள்ளார். பேஸ்புக்கில் அவர் கூறியிருப்பதாவது:-
அசாமில் இன்று முதல் கட்ட தேர்தல் தொடங்கி விட்டது. அசாம் மக்கள் குறிப்பாக இளைஞர்கள், சகோதரிகள் பெருமளவில் வந்து வாக்களிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம் மாநிலத்துக்கு பொன்னான எதிர்காலம் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.