பாவூர்சத்திரத்தில் தனியார் கல்லூரி பேராசிரியர் தற்கொலை

கல்லூரி நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியதால் மனமுடைந்த தனியார் கல்லூரி பேராசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

நெல்லை:

பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்த நாடார்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது50). இவருக்கு பவானி என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.

செல்வராஜ் நெல்லை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். அவரை கல்லூரி நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக அவர் மனம் உடைந்து காணப்பட்டார். இதற்கிடையே அவரது மனைவி பவானிக்கு மூளையில் கட்டி ஏற்பட்டு அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதனால் மேலும் மனம் உடைந்த செல்வராஜ் நேற்று மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com