சேலத்தில் கைதி மரணம்- மாஜிஸ்திரேட்டு நேரில் விசாரணை

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி திடீரென மரணம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட்டு நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள சிந்தாமணியூர் பகுதியை சேர்ந்தவர் புத்தப்பிரியன் (வயது 61). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் பணிக்குழு மாநில துணை செயலாளராக இருந்து வந்தார். 

இந்த நிலையில் ஒரு வழக்கு சம்பந்தமாக பள்ளப்பட்டி போலீசார் அவரை கடந்த மாதம் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த அவரை சில நாட்களுக்கு முன்பு போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் திடீரென இறந்தார். 

இந்த நிலையில் கைதி இறந்தது குறித்து மாஜிஸ்திரேட்டு நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து புத்தபிரியனின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com