சிறையில் கைதி அடித்து கொல்லப்பட்ட விவகாரம்- பாளை ஜெயில் சூப்பிரண்டு அதிரடி இடமாற்றம்

பாளை மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
பாளை ஜெயில் சூப்பிரண்டு இடமாற்றம்
பாளை ஜெயில் சூப்பிரண்டு இடமாற்றம்
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைக்குளத்தை சேர்ந்தவர் முத்து மனோ (வயது 27).

வழக்கு ஒன்றில் கைதான இவரை கடந்த ஏப்ரல் மாதம் பாளை சிறையில் அடைக்க சென்ற போது சக கைதிகள் 7 பேர் முத்து மனோவை அடித்து கொன்றனர்.

இந்நிலையில் முத்து மனோவின் கொலைக்கு காரணமான சிறைத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முத்து மனோவின் உடலை வாங்க மறுத்து இன்று 49-வது நாளாக அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே முத்து மனோ கொலை செய்யப்பட்ட அன்றைய தினம் பணியில் இருந்த ஜெயிலர், உதவி ஜெயிலர் உள்பட 7 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று பாளை மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

அவருக்கு பதிலாக திருச்சி சிறை கண்காணிப்பாளர் சங்கர் பாளை மத்திய சிறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

மேலும் ஜெயிலராக பணியாற்றிய பரசுராமன் மதுரை மத்திய சிறைக்கும், மதுரை மத்திய சிறை ஜெயிலர் வசந்த கண்ணன் பாளை மத்திய சிறைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com