பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓட்டம்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கைதி தப்பி ஓட்டம்
கைதி தப்பி ஓட்டம்
Published on

நெல்லை:

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீசுவரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜன் (வயது 34). இவர் கடந்த 2006-ம் ஆண்டு சொத்து தகராறில் உறவினர் ஒருவரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தோட்ட வேலை ஒதுக்கப்பட்டு இருந்தது.

அவர் தினமும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மற்ற ஆயுள் தண்டனை கைதிகளை தோட்ட வேலைக்கு அழைத்து செல்வார். வழக்கம் போல் நேற்று சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த கோவிந்தராஜன் நைசாக அங்கிருந்து தப்பியோடிவிட்டார். போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com