சேலம் சிறை கைதி திடீர் மரணம்

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சிறை கைதி உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.
மரணம்
மரணம்
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் ஆட்டுக்காரனூர் பகுதியை சேர்ந்தவர் முகமதுமீரான் (வயது 53).

இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கஞ்சா விற்ற வழக்கில் சேலம் செவ்வாய்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த அவருக்கு இன்று அதிகாலை திடீரென வலிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சிறை ஆஸ்பத்திரி டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். எனினும் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பிறகு முகமது மீரான் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com