மதுரை ஜெயிலில் ஆயுள் தண்டனை கைதி மரணம்

மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி மாரடைப்பால் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மரணம்
மரணம்
Published on

மதுரை:

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்துள்ள நெடியமாணிக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 47). இவர் ஆயுள் தண்டனை கைதி ஆவார்.

மதுரை மத்திய ஜெயிலில் கடந்த சில மாதங்களாக சிறைவாசம் அனுபவித்து வந்தார். இந்த நிலையில் பாண்டிக்கு நேற்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அலறித்துடித்தவரை போலீசார் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் டாக்டர்களின் சிகிச்சை பலனின்றி பாண்டி பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் தண்டனை கைதி மாரடைப்பால் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com