கோவை மத்திய சிறையில் தண்டனை கைதி திடீர் மரணம்

கோவை மத்திய சிறையில் தண்டனை கைதி திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மரணம்
மரணம்
Published on

கோவை:

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள சக்தி நகரை சேர்ந்தவர் சரவணன் என்கிற மனோகரன் (வயது 50). இவர் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சரவணன் கடந்த 2016-ம் ஆண்டு முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 4-ந்தேதி சிறையில் இருந்த இவருக்கு திடீரென வயிற்று வலியுடன் வாந்தி ஏற்பட்டது. இதனை பார்த்த சக கைதிகள் சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக டாக்டர் மூலமாக சரவணனுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறை கைதிகள் வார்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சரவணனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com