நன்னிலம் அருகே பூசாரி மனைவி தற்கொலை

நன்னிலம் அருகே குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த பூசாரி மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

நன்னிலம்:

நன்னிலம் அடுத்துள்ள பூங்குளம் கிராமம் ஆதிதிராவிட தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் மனைவி மைதிலி (35). இவர், மகளிர் குழுவில் வாங்கிய கடனை கட்டுவதற்காக தனது கணவர் முருகானந்தத்திடம் பணம் கேட்டுள்ளார். அவர் இல்லை எனக் கூறியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

குழுவிற்கு பணம் கட்ட இயலாமல் போய்விட்டது என்ற மன உளைச்சலில் வீட்டின் பின்பக்கம் மைதிலி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவலறிந்த நன்னிலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். மைதிலியின் கணவர் தனது குடியிருப்புக்கு அருகிலேயே ஆஞ்சநேயர் கோவில் அமைத்து பூஜை செய்து அதில் வரும் வருமானத்தை கொண்டு குடும்பம் நடத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com