அகமதாபாத் மைதானத்துக்கு ‘நரேந்திர மோடி’ பெயர்

அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தின் பெயர் ‘நரேந்திர மோடி’ மைதானம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி மைதானம்
நரேந்திர மோடி மைதானம்
Published on

அகமதாபாத்:

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகள் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான அகமதாபாத்தில் உள்ள மொதேரா சர்தார் படேல் மைதானத்தில் நடைபெறுகிறது. சீரமைக்கப்பட்ட ஸ்டேடியத்தில் முதல் முறையாக சர்வதேச போட்டிகள் இன்று தொடங்கியது.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான இதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முறைப்படி திறந்து வைத்தார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மைதானத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்தார் படேல் மைதானம் இனி நரேந்திர மோடி மைதானம் என்று அழைக்கப்படும். அதிநவீன வசதிகளைக்கொண்ட இந்த மைதானத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் அமரலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com