சிவகாசியில் ஒரு வயது குழந்தையுடன் கர்ப்பிணி நசுங்கி பலி

கணவருடன் மோட்டார் ைசக்கிளில் சென்ற போது அரசு பஸ் மோதியதில் 7 மாத கர்ப்பிணியும், அவருடைய ஒரு வயது பெண் குழந்தையும் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
ஒரு வயது குழந்தை கவிபாரதியுடன் சுந்தரலட்சுமி.
ஒரு வயது குழந்தை கவிபாரதியுடன் சுந்தரலட்சுமி.
Published on

சிவகாசி:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி கோட்டையூரை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் சிவகங்கையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும் சிவகாசி அருகே உள்ள பாறைப்பட்டியை சேர்ந்த சுந்தரலட்சுமி (வயது 24) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுடைய ஒரு வயது பெண் குழந்ைத கவிபாரதி, தற்போது சுந்தரலட்சுமி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த நிலையில் குழந்தை கவிபாரதியின் பிறந்தநாளை கொண்டாட நேற்று கருப்பசாமி-சுந்தரலட்சுமி தம்பதியினர் பாறைப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து நேற்று மதியம் சிவகாசிக்கு வந்து கேக் வாங்க முடிவு செய்து பாறைப்பட்டியில் இருந்து ேமாட்டார் சைக்கிளில் சிவகாசி நோக்கி வந்துள்ளனர். வாகனத்தை கருப்பசாமி ஓட்டியுள்ளார். அதில் கர்ப்பிணி சுந்தரலட்சுமி, மகள் கவிபாரதி, உறவினர் மகன் திவாகர் ஆகியோர் இருந்துள்ளனர்.

சிவகாசி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ேமாட்டார் சைக்கிள் வந்த போது சாத்தூரில் இருந்து சிவகாசி நோக்கி வந்த அரசு பஸ்சை, கருப்பசாமி முந்தி செல்ல முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மோதி கீழே விழுந்துள்ளார். இதில் பஸ் சக்கரத்தில் சிக்கி 7 மாத கர்ப்பிணி சுந்தரலட்சுமி மற்றும் 1 வயது மகள் கவிபாரதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கருப்பசாமி மற்றும் உறவினர் மகன் திவாகரன் ஆகியோர் காயத்துடன் உயிர் தப்பினர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் சேகரை போலீசார் கைது செய்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து கருப்பசாமியின் உறவினர்களும், சுந்தரலட்சுமியின் உறவினர்களும் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு அவர்கள் சுந்தரலட்சுமி, குழந்ைத கவிபாரதி உடல்களை பார்த்து கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்தால் சிவகாசி-சாத்தூர் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com