பொத்தூர் பகுதியில் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவி பலி

பொத்தூர் பகுதியில் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

ஆவடி:

ஆவடியை அடுத்த பொத்தூர் பகுதியில் வசித்து வருபவர் குமார். இவருடைய மகள் பிரியதர்ஷினி (வயது 18). இவர், அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இவர், தன்னுடைய தாய் விஜயலட்சுமி, தங்கை நித்தியஸ்ரீ மற்றும் அவரது தோழி ஒருவருடன் வீட்டின் எதிரே உள்ள குளத்தில் குளித்து கொண்டிருந்தார். அப்போது பிரியதர்ஷினி திடீரென குளத்தில் ஆழமான பகுதிக்கு சென்று சேற்றில் சிக்கிக்கொண்டார். இதனால் அவரால் வெளியே வர முடியாமல் நீரில் தத்தளித்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் விஜயலட்சுமி கூச்சலிட்டார்.

அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் நீரில் தத்தளித்து கொண்டிருந்த பிரியதர்ஷினியை மீட்டு ஆவடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பிரியதர்ஷினி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆவடி டேங்க்பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலியான பிரியதர்ஷினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com