

எலச்சிபாளையம்:
திருச்செங்கோட்டில் டார்கெட் என்ற பெயரில் ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் நெருக்கடிகளை உடனடியாக நிறுத்த வேண்டும், அஞ்சலக காப்பீடு திட்டத்தின் கீழ் அதிகமான ஆட்களை சேர்க்க வேண்டும் என்று அதிகாரிகள் ஊழியர்களை நிர்ப்பந்திக்கிறார்கள். இதனை கைவிட வலியுறுத்தியும், நடைமுறைக்கு சாத்தியமில்லாத இலக்குகளை நிர்ணயித்து, இலக்குகளை அடையவில்லை என்ற காரணங்களை கூறி ஊழியர்களுக்கு அவர்களுக்குரிய விடுப்புகள் மறுக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்செங்கோடு தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள், தேசிய அஞ்சல் ஊழியர் சங்கங்கள், அகில இந்திய கிராம ஊழியர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கிளை செயலாளர் ஜெகதீஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கங்களின் நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் சுப்பிரமணியம் மற்றும் 11 பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.