

பூந்தமல்லி:
பூந்தமல்லி கந்தசாமி நகர், கோபாலபுரத்தை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 85). இவர், தனது சைக்கிளில் பூந்தமல்லி-டிரங்க் சாலையில் பார்வையற்றோர் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பூந்தமல்லியை சேர்ந்த சத்யபிரியா (21) என்பவர் ஓட்டிவந்த மொபட் முதியவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிவலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். சத்யபிரியா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.