பொங்கலூர் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சியவர் கைது

பொங்கலூர் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

பொங்கலூர்:

பொங்கலூர் அருகே உள்ள கொசவம்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 55). இவர் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று திடீரென கணேசன் வீட்டில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு கணேசன் சாராயம் காய்ச்சி வந்தது தெரியவந்தது. அவரது வீட்டில் ஒரு லிட்டர் சாராயம் மற்றும் சாராயம் தயாரிப்பதற்கு பயன்படும் 25 லிட்டர் ஊறல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. உடனடியாக கணேசனை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com