போளூர் அருகே பாம்பு கடித்து பெண் பலி

போளூர் அருகே பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

போளூர்:

போளூர் அருகே ஜடாதாரிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 32), விவசாயி. இவரது மனைவி செல்வகுமாரி (27). இவர் தனது தாய் வீடான பூங்கொல்லை கிராமத்திற்கு நேற்று முன்தினம் சென்றார். அங்கு அடுப்பு எரிப்பதற்காக விறகு கொண்டு வர தோட்டத்திற்கு சென்றார். அப்போது செல்வகுமாரியை நல்ல பாம்பு கடித்து விட்டது.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று அவரை மீட்டு போளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்கு அவரை திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com