கோவில்பட்டியில் 32 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை நடக்கிறது

கோவில்பட்டியில் 32 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை நடக்கிறது.
போலியோ சொட்டு மருந்து
போலியோ சொட்டு மருந்து
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் 5 வயதுக்கு உட்பட்ட சுமார் 7,500 குழந்தைகளுக்கு 32 மையங்களில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த முகாமானது கோவில்பட்டி ரெயில் நிலையம், அண்ணா பஸ் நிலையம், கூடுதல் பஸ் நிலையம், டவுன் பஸ் நிலையம், மெயின் ரோட்டில் உள்ள புனித பவுலின் ஆலயம், புனித ஜோசப் ஆலயம், காஞ்சிநகர், இளையரசனேந்தல் ரோடு, பெரியார் தெரு, சந்தைப்பேட்டை தெரு, தட்சிணாமூர்த்தி கோவில் தெரு, பார்க்ரோடு, மெயின் ரோடு, சங்கரலிங்கபுரம், வேலாயுதபுரம், புதுக்கிராமம், வள்ளுவர்நகர், பாரதிநகர், ஸ்ரீராம்நகர், அசோக்நகர், வீரவாஞ்சிநகர் ஆகிய பகுதிகளில் உள்ள 32 முகாம்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

டாக்டர்கள் ராமமூர்த்தி, கவுசிக்குமார், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் சொட்டு மருந்து முகாமில் பணியாற்ற நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முகாமிற்கு அழைத்து வந்து பயன்பெறுமாறு நகரசபை ஆணையாளர் ராஜாராம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com