போலீசார் தாக்கியதில் வியாபாரி உயிரிழப்பு: சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

வியாபாரி முருகேசன் உயிரிழந்த விவகாரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வியாபாரி உயிரிழப்பு
வியாபாரி உயிரிழப்பு
Published on

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பாப்பநாயக்கன்பட்டி சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது   வாழப்பாடியில்  மளிகைக்கடை நடத்தும்  முருகேசன் என்பவர் போதையில் பைக் ஓட்டிக்கொண்டு வந்தார். போலீசார் அவரது பைக்கை பறிமுதல் செய்தனர்.

பைக்கை பறிமுதல் செய்த போலீசாரை, போதையில் இருந்த முருகேசன் ஆபாசமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து முருகேசனை போலீஸ்காரர் ஒருவர் லத்தியால் தாக்கினார்.

போலீஸ்காரர் லத்தியால் அடித்த நிலையில் முருகேசன் மயங்கி விழுந்தார். உடனடியாக போலீசார் முருகேசனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

முருகேசன் உயிரிழந்த விவகாரத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்திய சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி வியாபாரி உயிரிழந்த வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com