திருவண்ணாமலையில் இருந்து செம்மரம் வெட்ட திருப்பதிக்கு பைக்கில் சென்ற கும்பல்- போலீசார் விசாரணை

திருவண்ணாமலையில் இருந்து செம்மரம் வெட்ட திருப்பதிக்கு பைக்கில் சென்ற கும்பலில் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
போலீசார் விசாரணை
போலீசார் விசாரணை
Published on

திருப்பதி:

தமிழகம் மற்றும் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பதி சேஷாசலம் வனப்பகுதிக்கு செம்மரம் வெட்ட வரும் கூலித்தொழிலாளிகள் சிலர் போலீசாருக்கு சந்தேகம் வராமல் மாறு வேடத்தில் வருகின்றனர்.

அவ்வாறு வருவோர் காவி உடை அணிந்து பக்தர்கள் போலும், வியாபாரிகள் போலும் சேஷாசலம் வனப்பகுதிக்கு வருகிறார்கள்.

அதேபோல் தமிழகத்தில் இருந்து பலர் மோட்டர் சைக்கிள்களில் திருப்பதி சேஷாசலம் பகுதிக்கு வருவதாக திருப்பதி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து திருப்பதி அடுத்த கரகம்பாடி வனப்பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஒருவர் தமிழக பதிவெண் கொண்ட ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அவர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த நெல்லிமரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

இவரை போலீசார் பிடித்ததும் அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மற்ற கூலித்தொழிலாளிகள் 10 பேர் வந்த வழியாக திரும்பி தப்பி சென்று விட்டனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

கைதானவர் மீது திருப்பதி போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் வந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com