கூவத்தில் குதித்து தப்பி ஓடிய கொள்ளையர்களை விரட்டி பிடித்த போலீசார்

சென்னையில் கூவத்தில் குதித்து தப்பி ஓடிய கொள்ளையர்களை விரட்டிச் சென்று பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து ரொக்கப்பணம் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
கைதான கொள்ளையர்களை காணலாம்
கைதான கொள்ளையர்களை காணலாம்
Published on

சென்னை:

சென்னை கீழ்ப்பாக்கம் ஹாரிங்டன் சாலை, சாரி தெருவில் இக்பால் என்பவர் மருந்து கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது கடையின் ஷட்டர் கதவுகளை உடைத்து 2 கொள்ளையர்கள் கடைக்குள் புகுந்து விட்டனர். கடையின் கல்லா பெட்டியில் இருந்த ரூ.1½ லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையர்கள் அள்ளிச்சென்று விட்டனர். இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இணை கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட் தலைமையிலான தனிப்படை போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

கொள்ளைச்சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து, கொள்ளையர்கள் இருவரை அடையாளம் கண்டனர். அவர்களில் ஒருவர் பெயர் ராஜேஷ் (வயது 20), இன்னொருவர் பெயர் விஜயகுமார் (20). இவர்கள் இருவரும் மந்தைவெளியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரையும் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முற்பட்டனர். ஆனால் அவர்கள் கூவத்தில் குதித்து தப்பி ஓடினார்கள். போலீசார் பின்தொடர்ந்து கூவத்தில் குதித்து அவர்கள் இருவரையும் விரட்டிச்சென்று பிடித்தனர். அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரொக்கப்பணம் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com