போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சிறுவன் தற்கொலை

கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் 17 வயது சிறுவன் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை
தற்கொலை
Published on

கடலூர்:

கடலூர் எஸ்.என்.சாவடி பகுதியில் அரசினர் கூர்நோக்கு இல்லம் உள்ளது. 18 வயதுக்கு உட்பட்ட குற்றச்செயலில் ஈடுபடும் சிறுவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு இந்த கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட 17 வயது சிறுவன் 15 வயது சிறுமியை காதலித்து கடத்திச் சென்றதாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அந்த சிறுவன் கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டான்.

இந்த சிறுவன் அன்று முதல் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து நேற்று இரவு அந்த கூர்நோக்கு இல்லத்தில் உள்ள அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அங்குள்ள காவலாளி சதீஷ்குமார் என்பவர் வழக்கம் போல் கூர்நோக்கு இல்லம் முழுவதும் சோதனை செய்து கொண்டிருந்தார்.

அப்போது 17 வயது சிறுவன் தான் வைத்திருந்த போர்வையை கிழித்து ஜன்னலில் தூக்கு மாட்டி இறந்த நிலையில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து கண்காணிப்பாளர் பிரபாகரனுக்கு தகவல் அளித்தார். கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தூக்கில் பிணமாக தொங்கிய 17 வயது சிறுவன் உடலை கைப்பற்றி கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் 17 வயது சிறுவன் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com