முதல் கட்ட தேர்தல் வாக்களிப்பில் சாதனை படையுங்கள்- பிரதமர் மோடி வேண்டுகோள்

தகுதியுள்ள அனைவரும் வந்து ஓட்டளிப்பில் சாதனை படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மேற்கு வங்காளத்திலும், அசாமிலும் முதல்கட்ட ஓட்டுப்பதிவு தொடங்கியுள்ளது. மக்கள் அதிகளவில் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும். தகுதியுள்ள அனைவரும் வந்து ஓட்டளிப்பில் சாதனை படைக்க வேண்டும். குறிப்பாக இளம் வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com