இன்று சென்னை வருவதை டுவிட்டரில் தமிழில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருவதை முன்னிட்டு அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது வருகையை தமிழில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

சென்னையில் வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் விம்கோநகர் இடையே மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கிவைக்க பிரதமர் நரேந்திரமோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வருகிறார்.

இந்தநிலையில் தனது தமிழக வருகை குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் மொழியில் இது பதிவிடப்பட்டு இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-
பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நாளை (இன்று) நான் சென்னையில் இருப்பேன். நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவது, நகர்ப்புற இணைப்பு, பாதுகாப்புத் துறையில் ஆத்மநிர்பார்தா ஆகியவை இந்தத் திட்டங்களின் மையமாக உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் தனது தமிழக வருகை குறித்தும், என்னென்ன திட்டங்களை தொடங்கி வைக்கப்படுகிறது? என்பதை விளக்கும் மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் செய்திக்குறிப்பையும் அவர் இணைத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com