பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற ஒப்புதல் பெறப்படும் என தகவல்கள் கூறுகின்றன.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 29-ம் தேதி கூடுகிறது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டம் முறைப்படி திரும்பப் பெறப்படும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற ஒப்புதல் பெறப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

மேலும், வரவுள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. 

X

Maalai Malar
www.maalaimalar.com