தீபாவளி வாழ்த்து கூறிய இஸ்ரேல் பிரதமர் - நன்றி தெரிவித்த பிரதமர் மோடி

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஆகியோர் தீப ஒளியேற்றி அங்கு வசிக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயின்கள், புத்த மதத்தினருக்கு தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்தனர்.
பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட்
பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட்
Published on

புதுடெல்லி:

தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட் பிரதமர் நரேந்திர மோடிக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இனிய நண்பர் நரேந்திர மோடி, இந்தியா மற்றும் உலகெங்கும் தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, நப்தலி பென்னெட்டின் தீபாவளி வாழ்த்துக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன், உங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். 

கிளாஸ்கோவில் நடந்த பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடியை சந்தித்த இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட், இஸ்ரேலில் நீங்கள் மிகவும் பிரபலம். எனவே, எங்கள் கட்சியில் வந்து சேருங்களேன் என அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com