பிரதமர் மோடி அவருக்கு வணக்கம் சொல்லும் போது எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம்

பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வணக்கம் சொல்லும் போது எடுக்கப்பட்டதாக கூறி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி
Published on

பிரதமர் நரேந்திரமோடி பெண் ஒருவருக்கு கை கூப்பி வணக்கம் தெரிவிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் புகைப்படத்தில் இருப்பது தொழிலதிபர் கௌதம் அதானியின் மனைவி பிரீத்தி அதானி என கூறப்படுகிறது.

வைரல் புகைப்படம், கௌதம் அதானியின் மனைவியிடம் பிரதமர் மோடி எவ்வாறு தலை குணிகிறார் என பாருங்கள் எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், புகைப்படத்தில் இருப்பது ஜனாதிபதி மாளிகை புகைப்படக் கலைஞரின் மனைவி தீபிகா மண்டோல் ஆகும். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்த செய்தி 2018 ஆம் ஆண்டு பல்வேறு வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் வைரல் புகைப்படத்தில் இருப்பவர் கௌதம் அதானியின் மனைவி இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com