கோடம்பாக்கத்தில் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

சென்னை கோடம்பாக்கத்தில் பிளஸ்-1 மாணவர், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

சென்னை:

சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மகன் சிபிசரண் (வயது 16). இவர், சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

நேற்று காலை நீண்டநேரம் ஆகியும் சிபிசரணின் படுக்கை அறை கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த சுதாகர், அந்த அறையின் கதவை திறந்து பார்த்தார்.

அங்கு தனது மகன் சிபிசரண் ‘கராத்தே பெல்டால்’ மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com