உளுந்தூர்பேட்டை அருகே திருமணத்துக்கு பிளஸ்-1 மாணவி கடத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருமணத்துக்கு பிளஸ்-1 மாணவி கடத்தப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருநாவலூர்: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எஸ்.மலையனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. கூலி வேலைபார்த்து வருகிறார். இவரது மகள் எலவனாசூர்கோட்டை அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

கடந்த 8-ந்தேதி தனது வீட்டு தோட்டத்தில் ஆன்லைன் மூலம் செல்போனில் மாணவி பாடம் படித்து கொண்டிருந்த போது திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த ஜெயலட்சுமி தனது மகளை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடிபார்த்தார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அக்கம் பக்கம் விசாரித்தபோது எஸ். மலையனூர் பகுதியை சேர்ந்த அய்யப்பன் (வயது 23) என்பவர் திருமணத்துக்காக பிளஸ்-1 மாணவியை கடத்தி சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

இதற்கு உடந்தையாக அய்யப்பனின் சகோதரர் ஆறுமுகம், அவரது மனைவி பிரியா ஆகியோர் இருந்துள்ளனர். இதுகுறித்து எலவனாசூர்கோட்டை போலீசில் ஜெயலட்சுமி புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com